புறாவுக்கு உணவளித்ததற்காக 40 வயது லண்டன் பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் லண்டனின் ஹாரோவில் வீல்ட்ஸ்டோன் ஹை ஸ்ட்ரீட்டில் கடந்த புதன்கிழமை நடந்தது. நகர மையத்தில் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு உணவளிப்பதைத் தடைசெய்யும் சட்டத்தை மீறி, அந்தப் பெண் புறாக்களுக்கு உணவளித்துக்கொண்டிருந்தார். லண்டன் காவல்துறை இதைக் கவனித்து, அந்தப் பெண்ணுக்கு 100 யூரோ அபராதம் விதித்தது. அந்தப் பெண் 28 நாட்களுக்குள் அபராதம் செலுத்த வேண்டும்.