திருச்சியைச் சேர்ந்த பெண், பாஜக பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தன்னை திருமணம் செய்வதாக கூறி பாலியல் ரீதியாக ஏமாற்றியதாக புகார் அளித்தார். இதனடிப்படையில், கருப்பு முருகானந்தம், அந்தப் பெண் நிர்வாகியின் கட்சி பதவி பறிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண், முருகானந்தம் தன்னை டெல்லி, பெங்களூரு அழைத்துச் சென்று உடலுறவில் ஈடுபடுத்தியதாகவும், சொத்துக்களை எழுதி வாங்கியதாகவும், நேற்று காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார். மேலும், தனது நிர்வாணப் படங்கள், வீடியோக்களை பரப்பி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.