தூத்துக்குடியில் விரைவில் மின்சார கார் உற்பத்தி ஆரம்பம்

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் என்ற நிறுவனம், தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் சிப்காட் பகுதியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைத்து வருகிறது. முதற்கட்டமாக ரூ.1,119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 50 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் 2 பணிமனைகள், 2 குடோன்கள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவைகள் அமைக்கும் பணி நடந்து முடிவடையும் நிலையில் உள்ளது. ஜூலை மாதத்தில் கார் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி