ஆர்.ஆர். நிறுவனம், 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஏர் கூலர் கருவியை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. மின் தடங்கல் சமயங்களில் இதை இன்வெர்ட்டரில் இயக்க முடியும். குட்டியான வடிவமைப்பு, பரவலான காற்று விநியோகம், காற்றை சுத்தமாக்கி கொடுக்க பிரத்யேக பில்டர்கள் போன்ற பல்வேறு வசதிகள் உள்ளன. ஒரு வருட வாரண்டியுடன் கிடைக்கும் இந்த ஏர் கூலர் 100 சதுர அடி அறைக்கு போதுமான காற்றை வழங்குகிறது. இதன் விலை ரூ.4,950.