என்னை காணவில்லையா? பாமக பொதுச்செயலாளர் பகீர் (வீடியோ)

பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.100 கொடுக்கப்படும் என ராமதாஸ் அறிவித்ததற்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. பாமகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனையால் தந்தை ராமதாஸிடம் இருப்பதா? மகன் அன்புமணியிடம் இருப்பதா? என குழப்பத்தில் இருக்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் செய்வதறியாது திணறி வருகிறார். அவர் மாயமானதாக ராமதாஸும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், நான் எளிய முறையில் டீக்கடையில் இருப்பதாக வடிவேல் ராவணன் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி