தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பில் இருந்து தற்போதைய தலைவர் செல்வபெருந்தகை விலக உள்ள நிலையில், கன்னியாகுமரி எம்.பி., விஜய்வசந்த் பெயர் மாநிலத் தலைவர் பதவிக்கு வலுவாகப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மறைந்த எம்.பி., வசந்தகுமாரின் மகனான விஜய்வசந்த், 2 முறை கன்னியாகுமரி தொகுதியில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இளைஞர்களைக் கவரும் இவரது திறமையும், தென் மாவட்டங்களில் காங்கிரஸின் வாக்கு வங்கியை வலுப்படுத்தும் நோக்கிலும் இவருக்குப் பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.