”மோடியை ‘அங்கிள்’ என விஜய் அழைப்பாரா?”.. விசிக வன்னியரசு கேள்வி

தவெக தலைவர் விஜய், தொடர்ந்து திமுக-வுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காத பிரதமர் மோடியை ‘அங்கிள்’ என தவெக தலைவர் விஜய் அழைப்பாரா. விஜய்யால் பிரதமர் மோடியை அப்படி அழைக்க முடியாது, அவருக்கு துணிச்சல் இல்லை. இந்த 2026 தேர்தல் காந்தியின் பேரன்களுக்கும் கோட்சேவின் பேரன்களுக்கும் இடையே நடக்கும் யுத்தம்” என்றார்.

தொடர்புடைய செய்தி