பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பேருந்துகளில் இதுவரை 77,000-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், மக்கள் சிரமமின்றி சொந்த ஊர் செல்ல ஏதுவாக ஜன.14-ம் தேதியன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, பொங்கலுக்கு முந்தைய தினமான ஜன.14-ஐ அரசு விடுமுறையாக அறிவிப்பது குறித்து தமிழக அரசு விரைவில் ஆலோசித்து முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.