பிரபல திரைப்பட பாடகர் மலேசியா வாசுதேவனின் நினைவு தினம் இன்று (பிப். 20) அனுசரிக்கப்படுகிறது. திரைவானில் தனித்துவம் பெற்ற மலேசியா வாசுதேவன் தமது வெண்கல குரலால் 80, 90 களில் ரசிகர்களை வசியப்படுத்தியவர், தமிழில் 8000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் மனம் கவர்ந்திருக்கிறார். உடலால் மலேசியா வாசுதேவன் மறைந்தாலும் அவரின் குரலால் சாகாவரம் பெற்று ரசிகர்கள் மனதில் என்றென்றும் வாழ்ந்து வருகிறார்.