அதிமுக சார்பில் மாநிலங்களவைக்கு 2022-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட சி.வி. சண்முகம், மயிலம் தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்றதால், தனது இன்னும் 2 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். இதனால் ஏற்படும் காலியிடத்தை நிரப்ப, அடுத்த 6 மாதங்களுக்குள் புதிய உறுப்பினர் தேர்வுக்கான ராஜ்யசபா தேர்தல் நடைபெறும். சட்டப்பேரவை பலத்தின் அடிப்படையில், இந்த ஒரு இடத்திற்கான தேர்தலில் விஜய்யின் தவெகவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.