பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது பொதுமக்கள், முதலீட்டாளர்கள், தொழில் துறையினர் என பல்வேறு தரப்பினரிடமும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய தங்கநகை வியாபாரிகள், இந்த ஆண்டு மார்ச் மாதம் தான் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.8000 வரை வரும் என எதிர்பார்த்தோம். ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அந்த விலை வந்துவிட்டது. எனவே இந்தாண்டுக்குள் தங்கம் விலை ஒரு சவரன் ஒரு லட்சம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கின்றனர்.