மின்சாரத்துறையை முழுமையாகச் சீரமைக்கும் பணிகள் படிப்படியாகத் தொடங்கும் என்றும், இது முடியச் சில மாதங்கள் ஆகலாம் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மக்களுக்குத் தடையற்ற மின்விநியோகத்தை வழங்க மின்வாரியம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அவர், மின்தடை ஏற்படும் பகுதிகளில் புதிய துணை மின்நிலையங்கள் மற்றும் உயர்திறன் மின்மாற்றிகள் அமைக்கப்படும் என்றார். அமைச்சரின் இந்த பேச்சு மேலும் சில மாதங்களுக்கு மின்தடை நீடிக்குமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி: நியூஸ் 18