தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட், IUML, விசிக ஆகிய காட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. இதனால் தவெக ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், IUML, கம்யூனிஸ்ட் காட்சிகள் வெளியே இருந்து ஆதரவு அளிப்பதாகவும், ஆட்சியில் பங்குபெறவில்லை என கூறியுள்ளது. இந்நிலையில், விசிக ஆட்சியில் பங்குபெற உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, "ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு, இது திருமா காலம், உயர்வோம் மேலும் மேலும்" என விசிக எம்.எல்.ஏ வன்னி அரசு பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.