மக்களவை தலைவர் கொடுத்த தேநீர் விருந்தில் திமுக எம்.பி., கனிமொழி பங்கேற்றதன் மூலம், "திமுக பாஜக கூட்டணியா?" என்ற கேள்வி எழுந்துள்ளதாக விசிக முதன்மை செயலாளர் ஆளுர் ஷா நவாஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இத்தகைய கேள்வி தவெகவை நோக்கி வராமல் இருக்க, சுதந்திர தினத்தில் ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்தை முதலமைச்சர் புறக்கணிப்பார் என்று நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார். தவெக அமைச்சரவையில் விசிக அங்கம் வகித்தாலும், அரசுக்கு எதிராக ஆளுர் ஷா நவாஸ் விமர்சனம் முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.