மத்திய அரசானது ‘Women Work from Home Scheme’ திட்டத்தின் கீழ் மகளிருக்கு வீட்டிலிருந்து வேலை செய்து மாதம் ரூ.25,000 ஊதியம் வழங்கவுள்ளது என சமூக வலைதளங்களில் தகவல் பரவிவருகிறது. இதுகுறித்து PIB Fact Check விளக்கம் அளித்து, மத்திய அரசு இப்படியான திட்டத்தை அறிவிக்கவில்லை என தெரிவித்துள்ளது. மேலும், போலி தகவல்களை சரிபார்க்க 87997 11259 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி உண்மை அறியுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.