மகளிர் உரிமை தொகைக்காக ஆதி திராவிடர் நல நிதி மடைமாற்றமா? அரசு விளக்கம்

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நிதியை மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.5000 வழங்கப்பட்டதாக பரவும் தகவல் பொய்யானது என தமிழக அரசு மறுத்துள்ளது. இத்திட்டத்திற்காக தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்படுத்தப்படும் ஒன்று என அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும், தவறான தகவல்களை பரப்பி குழப்பத்தை ஏற்படுத்துவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி