தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் ஹிட் அடிக்குமா?

தவெக தனது தேர்தல் வாக்குறுதிகளை நாளை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பெண்களுக்கான முக்கிய திட்டங்களும், பிரத்யேக வாக்குறுதிகளும் இடம்பெறும் என கூறப்படுகிறது. அதிமுக, திமுகவின் ரூ.2,000-க்கு போட்டியாக, தவெக சார்பில் மகளிர் தொகையாக ரூ.3,000 வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சென்னையில் பெண்கள் அனைத்து பேருந்துகளிலும் இலவசமாகப் பயணிக்க திட்டம் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. உயர்கல்வி மாணவர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டமும் அறிவிக்கப்படவுள்ளதாம்.

தொடர்புடைய செய்தி