தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆளுநர் ரவியை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று (டிச. 30) மதியம் 1 மணிக்கு சந்திப்பு நடக்க உள்ளதாக தெரிகிறது. அண்மையில் மாணவி, பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தை அதிரவைத்த நிலையில் அது தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.