கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இந்த வாரம் ராஜினாமா செய்யவுள்ளதாகவும், அடுத்த முதலமைச்சராக டி.கே.சிவகுமார் பதவியேற்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சித்தராமையாவுக்கு மாநிலங்களவை பதவி வழங்கப்படவுள்ளதாகவும், டெல்லி அரசியலுக்கு வருமாறு காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அடுத்த 3 நாட்களுக்குள் சித்தராமையா ராஜினாமா செய்ய இருப்பதாக தெரிகிறது. 2023 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே CM பதவியை பிடிப்பதில் போட்டி நிலவியது குறிப்பிடத்தக்கது.