பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் மூலம் 80 கோடிக்கும் மேற்பட்டோர் பயன் பெறுகின்றனர். இந்நிலையில் போலி ரேஷன் பயனர்களை தடுக்க e-RUPI டிஜிட்டல் வவுச்சர் முறையை கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. மாதம் ரூ.500 அல்லது ரூ.1000 மதிப்பிலான வவுச்சர்கள் மொபைலுக்கு அனுப்பப்பட்டு, ரேஷன் பொருட்கள் அல்லது பணமாக மாற்றிக்கொள்ளலாம். சண்டிகர், புதுச்சேரியில் சோதனை நடைபெற்று வருகிறது.