மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலில் திமுக சார்பில் அமைச்சர் மூர்த்தி போட்டியிடுகிறார். அதிமுகவில் மாங்குளம் மகேந்திரன், நாதக சார்பில் செல்வம், தவெக சார்பில் கார்த்திகேயன் களமிறங்குகின்றனர். இந்த தொகுதியில் தற்போது திமுகவைச் சேர்ந்த அமைச்சர் மூர்த்தி எம்எல்ஏ-வாக உள்ளார். அவரை வீழ்த்த அதிமுக வேட்பாளர் தீவிர பரப்புரை செய்து வருகிறார். இதனால், இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? என கணிக்க முடியவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.