உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மதிமுக எம்.எல்.ஏ-க்கள் (சீர்காழி, கடையநல்லூர்) தங்கள் பதவியை ராஜினாமா செய்கிறார்களா என்ற பேச்சு எழுந்துள்ளது. முன்னதாக, அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 4 பேரின் ராஜினாமாவை தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் சிபிஎம், விசிக, காங்கிரஸ் கட்சிகள் கண்டித்திருந்தன. ஆனால், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதனை வரவேற்று, 2009-ல் திமுக செய்ததையே தற்போதைய முதல்வர் விஜயும் செய்துள்ளார் எனக் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.