தவெகவில் இணையும் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி?

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேத்தியும் மு.க.அழகிரியின் மகளுமான கயல்விழி, தலைமைச் செயலகத்தில் தவெக அமைச்சர்களை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். விஜய் முதல்வராகப் பதவியேற்ற விழாவிலும் பங்கேற்ற இவர், தவெகவில் இணைந்து மதுரை மேயர் பதவியைக் குறிவைப்பதாகத் தகவல் வெளியானது. இச்சந்திப்பு குறித்துப் பேசிய கயல்விழி, "முதல்வரைச் சந்திக்கவில்லை, அமைச்சர்களை மட்டுமே மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன்" எனக் கூறியுள்ளார்.

 நன்றி:நியூஸ் 18

தொடர்புடைய செய்தி