கர்நாடக விவகாரம் தொடர்பாக ராகுல், கார்கே உள்ளிட்டோருடன் 6 மணி நேரம் காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தியுள்ளது. டி.கே.சிவகுமாரை அடுத்த முதலமைச்சராக்க ராகுல் ஆதரவு தெரிவித்ததாகக் கூறப்படும் நிலையில் கர்நாடக முதலமைச்சர் பதவியை சித்தராமையா நாளை ராஜினாமா செய்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 2023 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே முதலமைச்சர் பதவியை பிடிப்பதில் போட்டி நிலவியது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தந்தி