தவெக அமைச்சரவையில் இடம்பெறுமா ஐயுஎம்எல்? இன்று ஆலோசனை

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் இணைவது குறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியின் மாநில நிர்வாகக் குழு அவசர கூட்டம் இன்று (மே 21) சென்னையில் நடைபெறுகிறது. கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், தவெக தரப்பில் விடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அழைப்பை ஏற்று அமைச்சரவையில் பங்கேற்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி