இனிப்பு சுவை கொண்ட சீத்தாப்பழம் இரத்த சர்க்கரை அளவை சட்டென்று உயர்த்திவிடுமோ என்ற பயம் பலரிடமும் பரவலாக காணப்படுகிறது. ஆனால், இதில் மிதமான கிளைசெமிக் குறியீடு மற்றும் அதிக நார்சத்து நிறைந்துள்ளதால், இது இரத்தத்தில் சர்க்கரை உடனடியாக கலப்பதை தடுக்கிறது. இருப்பினும், சர்க்கரை நோயாளிகள் தங்களின் தற்போதைய குளுக்கோஸ் அளவை கருத்தில் கொண்டு, மருத்துவரின் ஆலோசனைப்படி அளவோடு சாப்பிடுவதே எப்போதும் பாதுகாப்பானது.