2026 சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் சிகிச்சையில் இருப்பதால், அவரது கூடுதல் பொறுப்புகளை கவனிக்க முக்கிய நிர்வாகியை தேர்வு செய்ய ஆலோசனை நடைபெற்றது. இதில், கட்சியின் பொருளாளர் டி.ஆர். பாலுக்கு அந்த பொறுப்பு வழங்கப்படும் வாய்ப்பு அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.