முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை, தற்போதைய முதலமைச்சர் விஜய் ரூ.350 கோடிக்கு வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நீலாங்கரையிலிருந்து தினமும் 18.5 கி.மீ தூரம் அவர் தலைமை செயலகத்திற்கு பயணிப்பதால், பாதுகாப்பு பணிகளால் மாணவர்களும் பொதுமக்களும் பாதிக்கப்படுவதாக கூறப்படும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிகிறது. போயஸ் கார்டனுக்கு குடியேறுவதன் மூலம், பாதுகாப்பு சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க விஜய் தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.