தேர்தலுக்கு முன் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? - சபாபதி மோகன்

தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக புதிய கட்சி ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளதாக திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சபாபதி மோகன் தெரிவித்துள்ளார். பாஜகவில் அண்ணாமலையின் நாட்கள் எண்ணப்பட்டு வருவதாகவும், தன்னை தனிப்பட்ட முறையில் பிரபலப்படுத்தி கொள்ளவே அவர் ஊடகங்களில் தொடர்ந்து பேட்டி அளிப்பதாகவும் சபாபதி மோகன் விமர்சித்துள்ளார். ஏற்கனவே அண்ணாமலை புதிய கட்சி தொடங்க உள்ளதாக பரவிய தகவலுக்கு மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி