தேர்தல் வாய்ப்பு மறுக்கப்பட்ட விரக்தியில் விசிகவினர் சிலர் தவெக மற்றும் திமுகவிற்கு மாறத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதை அறிந்த திருமாவளவன், விசிகவினரைச் சேர்க்க வேண்டாம் என ஆதவ் அர்ஜுனாவிடம் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், விசிக முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் தன் ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையத் திட்டமிட்டுள்ளதாகவும், ஏற்கெனவே ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாகவும் பேச்சு எழுந்துள்ளது.