டெல்லி ஷாலிமார் பாக் பகுதியைச் சேர்ந்த நலச் சங்கத் தலைவர் ரச்சனா யாதவ் (44) நேற்று (ஜன.10) காலை சுட்டுக் கொல்லப்பட்டார். 2023-ல் அவரது கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவர் முக்கிய சாட்சியாக இருந்தார். சாட்சி சொல்லுவதைத் தடுப்பதற்காகவே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.