மனைவி கொலை.. கள்ளக்காதலியுடன் சிக்கிய கணவன்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மனைவியை அடித்து கொலை செய்த கணவன், தனது காதலியுடன் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் அத்திவாக்கம் பகுதியைச் சேர்ந்த கவுசல்யா (20) திருமணமான 5 மாதங்களில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில், கவுசல்யாவின் அத்தை மகனும் கணவருமான ராஜேஷ் (30) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையில், தனது காதலி தீபிகா (21) உடன் சேர்ந்து ராஜேஷ் கவுசல்யாவை அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி