கிருஷ்ணகிரி திம்மாபுரத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (45). இவரது மனைவி கவிதா. மஞ்சுளா என்ற பெண்ணிற்கும் ரங்கசாமிக்கும் கள்ளதொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 10-ம் தேதி ரங்கசாமியின் அலறல் சத்தம் கேட்டு அவரது மகன் சூர்யா சென்று பார்த்துள்ளார். இதில் ரங்கசாமி பெட்ரோல் ஊற்றி எரிந்த நிலையில் கிடந்துள்ளார். மேலும், கவிதா பதற்றத்துடன் அங்கிருந்து ஓடியுள்ளார். இதையடுத்து, காவிதாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிகிச்சை பலனின்றி ரங்கசாமி நேற்று (ஜூன் 11) உயிரிழந்தார்.