அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே பிரியாணி வாங்கியது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில், ரமேஷ் என்பவர் தன் மனைவி சுமதியை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். கொலையை மறைத்து இறுதிச்சடங்கு செய்ய முயன்ற ரமேஷை, சுமதியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.