ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் அகமதாபாத் திடலில் இன்று (பிப்.26) நடைபெறும் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை குவித்துள்ளது. இதில் ரோமாரியோ ஷெஃபெர்ட் 37 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் அடித்து 52 ரன்கள் எடுத்தார்.