ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் அகமதாபாத்தில் இன்று (பிப்.26) நடைபெற்ற போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை குவித்துள்ளது. தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 16.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.