அதிமுகவில் இருந்து மேலும் 7 எம்.எல்.ஏக்களை இழுக்கும் தவெக?

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தலைமைச் செயலகத்திலேயே தவெகவில் இணைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கட்சித் தாவல் தடைச் சட்டத்தைத் தவிர்க்கவே இந்த யுக்தி கையாளப்பட்டதாகக் கூறப்படுகிறது. கூட்டணி கட்சிகளின் அழுத்தமின்றித் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவே முதல்வர் விஜய் இந்த மாஸ்டர் பிளான் போட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், அரசின் நிர்வாக மையமான தலைமைச் செயலகத்தில் கட்சி உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இதற்கிடையே, தனிப் பெரும்பான்மைக்காக அதிமுகவிலிருந்து மேலும் 7 எம்எல்ஏக்களை இழுக்கத் தவெக முயன்று வருவதாகவும் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி