பொதுமக்களுக்கு மானிய விலையில் வெங்காயம் வழங்க, NAFED நிறுவனத்திடமிருந்து 400 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் அனுமதி அளித்தது. ஆனால், மகாராஷ்டிராவிலிருந்து வரவழைக்கப்பட்ட வெங்காயத்தை அக்., 31-ல் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அதில் பெரும்பகுதி அழுகியும், தரமற்றும் இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் அன்றே இந்த கொள்முதல் ஆணை ரத்து செய்யப்பட்டது. முன்பணம் ஏதும் வழங்கப்படாததால் அரசுக்கு இழப்பு தவிர்க்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நன்றி: Pttv