"கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது கோயில்களில் வி.ஐ.பி. தரிசனம் ஏன்? பணம் கொடுத்தால் கடவுளை கட்டியணைக்க முடியுமா?" என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆன்மிக தலங்களில் நிலவும் சிறப்பு தரிசன முறையை எதிர்த்து கேள்வி எழுப்பியுள்ளது. சாமானிய பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கில் நீதிமன்றத்தின் இந்த கேள்வி அமைந்துள்ளது.