தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஏப்.16 முதல் 18 வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் அவசரமாக கூட்டப்படுவது, தமிழக எம்.பி. தொகுதிகளைக் குறைப்பதற்கான சதி என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், மக்களவையில் 7 பேர், மாநிலங்களவையில் 25 பேரை நீக்கிவிட்டு, தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை நிறைவேற்றி எம்.பி.க்களின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.