தேர்தல் தோல்வி ஏன்?.. திருச்சி, நெல்லை நிர்வாகிகளிடம் இபிஎஸ் இன்று ஆலோசனை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, கட்சியின் மறுசீரமைப்பு மற்றும் அடுத்தகட்ட பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று (ஜூலை.8) திருச்சி மற்றும் நெல்லை மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து, அண்மையில் நடைபெற்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள், நிர்வாகிகளின் செயல்பாடு, வாக்கு சரிவு உள்ளிட்ட விவரங்களை கேட்டறிகிறார். மேலும், எதிர்கால தேர்தலுக்கான வியூகம் மற்றும் கட்சியை பலப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி