'பாம்புக்கு பாசமாக பால் வார்த்தலும் அதன் குணம் சீறும்' என்பது நமது ஊர் சொல் வழக்கு. ஏனெனில் பாம்பை நாம் செல்லப்பிராணியாக அரவணைத்து பார்த்துக்கொண்டாலும், நாம் செய்யும் சிறிய அளவிலான விஷயமும் அதனை பாதித்தால் தனக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ? என்ற அச்சம் மற்றும் பயம் காரணமாக நம்மை தீண்டிவிடும் வாய்ப்புகள் அதிகம். ஆகையால், பாம்புகளை ஒருபோதும் செல்லப்பிராணியாக வளர்க்க கூடாது. மேலும், அதன் இயற்கை வாழ்விடங்களை அவை மறந்துபோகும் நிலையும் ஏற்படலாம்.