விஜய் மீது விமர்சனம் ஏன்? - திருமாவளவன் விளக்கம்

தவெக தலைவர் விஜய் மீது எங்களுக்கு எந்த வன்மமும் இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சென்னையில் இன்று (அக்.7) பேட்டியளித்த அவர், "விஜய்யை கைது செய்ய வேண்டும் என நாங்கள் வலியுறுத்தவில்லை. நடந்த சம்பவத்திற்கு விஜய் தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும் என்றுதான் விமர்சனம் செய்து வருகிறோம்" என தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் பாஜகவும், அதன் கூட்டணி கட்சிகளுமே அரசியல் செய்கின்றன என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நன்றி:சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி