பிறப்பு முதல் இறப்பு வரை வீழ்வதும், எழுவதும் மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை. தோல்வி என்பதற்கு இந்தச் சமூகம் கொண்டிருக்கும் வரையறையே மிகத் தவறானது. முயலாமை தான் தோல்விக்கு வழிவகுக்கிறது. தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி சாத்தியமே. ஆனால் தோல்வி என்ற வார்த்தை ஒருவரை இனி அவர் வெற்றியே பெறவே தகுதியற்றவர் என்ற கோணத்தில் கூறப்படுகிறது. ஒருவர் தோல்வியுற்றுவிட்டார் என்பதைக்கூட அவர் வெற்றி பெற முயற்சி செய்கிறார் எனக் கூறலாம் அல்லவா?