சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை (SIR) தமிழக அரசு ஊழியர்கள் இன்று (நவ.18) முதல் புறக்கணித்துள்ளனர். இந்நிலையில், முறையற்ற முறையில் இப்பணிகள் செய்யப்படுவதைத்தான் அரசு எதிர்க்கிறது என திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார். மேலும், வாக்காளர் பட்டியலை முறைப்படுத்த வேண்டும் என்று கூறிய அவர், அசாமில் கணக்கீட்டு படிவத்தை நிரப்ப தேவையில்லை என தேர்தல் ஆணையம் சலுகை அளிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நன்றி:NewsTamil24/7