பாலியல் குற்றங்கள் குறித்து விஜய் ஏன் பேசவில்லை? - டிடிவி தினகரன்

தமிழகத்தில் நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் வாய் திறக்க மறுப்பது ஏன் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பெண்களின் பாதுகாப்புக்காக முதலமைச்சரின் முதல் கையெழுத்தாக உருவான ‘சிங்கப் பெண் படை’ திட்டத்தை தொடங்குவதற்கு இன்னும் நாள், நட்சத்திரம் பார்த்து கொண்டிருக்க வேண்டுமா என்றும் அவர் சாடியுள்ளார். தற்போதைய ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டு, இத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி