கோடையில் வளிமண்டல வெப்பம் அதிகரிப்பதால் நம் உடலில் இருந்து வியர்வை வழியாக அதிகளவிலான நீர் வெளியேறி, கடுமையான நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதனால் சிறுநீரின் அளவு குறைந்து, அதில் கால்சியம், ஆக்சலேட் போன்ற தாதுக்கள் அடர்த்தியாகி படிகங்களாக மாறி சிறுநீரக கற்களை உருவாக்குகின்றன. இந்த பாதிப்பை தவிர்க்க கோடைக்காலத்தில் தினசரி 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பதோடு, இளநீர் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த பழங்களை எடுத்து கொள்வது அவசியமாகும்.