பெண்களுக்கு கூடுதல் தூக்கம் ஏன் அவசியம்?

ஆண்களை விட பெண்களுக்குத் தினமும் 20 நிமிடங்கள் கூடுதல் தூக்கம் தேவைப்படுவதாகப் புதிய மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. பெண்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் 'மல்டி டாஸ்கிங்' திறனைக் கொண்டிருப்பதால், அவர்களின் மூளை அதிக ஆற்றலைச் செலவிடுவதே இதற்குக் முக்கியக் காரணமாகும். பெண்களுக்குப் போதிய தூக்கம் கிடைக்காத பட்சத்தில் மன அழுத்தம், பதற்றம் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕