“கவின் வீட்டிற்கு விஜய் ஏன் செல்லவில்லை?” - விசிக பொதுச்செயலாளர் கேள்வி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன், தவெக விஜய்க்கு எதிராக கேள்விகளை முன்வைத்துள்ளார். அவர் கூறியதாவது, “காவல் துறை லாக்கப்பில் மரணம் அடைந்தவர்களின் வீடுகளுக்கு விஜய் செல்லும் நிலையில், கவின் போன்று ஆணவப் படுகொலை செய்யப்பட்டவர்களின் வீட்டுக்கு ஏன் செல்லவில்லை?” என கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, லாக்கப் மரணத்தில் இறந்தவர்களுக்கு ஆதரவாக, திமுகவை எதிர்த்து, விஜய் ஆர்ப்பாட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி