செங்கோட்டையன் புறக்கணிப்பு.. ஜெயக்குமார் மழுப்பல் பதில்

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேறியதற்கு ஜெயலலிதாவும், இபிஎஸ்ஸும் தான் காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர், எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தியது விவசாயிகள் கூட்டமைப்புதான், அதிமுக இல்லை என்றார். முன்னதாக செங்கோட்டையன் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெறாததாலேயே இபிஎஸ் பங்கேற்ற நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என கூறியிருந்தார். இச்சம்பவம் அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவுவதை வெளிப்படையாக காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி